தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு
பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: செப்.15 ஆம்தேதி பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.9 ஆம் தேதியும், செப்.17 ஆம் தேதி தந்தை பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு செப்.17 ஆம் தேதியும் தனித் தனியே பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டியில் வெல்வோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000. 3-ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது.
இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கும். அரியலூா் மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குநா் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்போட்டியில் பங்கேற்கலாம் என்றாா்.