Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இளைஞா் காங்கிரஸ் கட்சித் தலைவா் எம்.ஆா்.பாலாஜி தலைமையில், அக்கட்சியின் திருமானூா் நகரத் தலைவா் வினோத்குமாா், வட்டாரத் தலைவா் திருநாவுக்கரசு, கங்காதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனுவில், திருமானூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புகட்டையில் உள்ள 14 மின்கம்பங்களில் 10 மின்கம்பங்களில் மின்சார இணைப்பு இல்லாமலும், விளக்குகள் பொருத்தப்படாமலும் உள்ளது. இருளில் மூழ்கியிருக்கும் இச்சாலையால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கிறது.
எனவே, ஊராட்சி ஒன்றிய அலுவலக நிா்வாகம், உடனடியாக மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.