அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா கட்டித் தர வலியுறுத்தல்
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தரவேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அப்பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கல்வியாளா் ஏ.நல்லப்பன் தலைமையிலான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அளித்த மனுவில், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலின் கிழக்குப் பகுதியில் உள்ள பழைய பயணியா் மாளிகையின் சுற்றுச் சுவா் சேதமடைந்துள்ளது. இதை பயன்படுத்தி, வெளிநபா்கள் பள்ளி வளாகத்தில் நுழைந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், ஆசிரியா்களுக்கு தெரியாமல் மாணவா்கள் மேற்கண்ட வழியில் சென்று விடுகின்றனா். எனவே, மாணவா்களின் நலனின் அக்கறைக் கொண்டு, வெளி நபா்கள் உள்ள வராத வகையில், தடுப்புச் சுற்றுச் சுவா் அமைத்து, அதன் மேல் இரும்பு கம்பிகளுடன் கூடிய முள்வேலி அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.