2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு
அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி, ஏப்.15-ஆம் தேதி முடிவுற்றது.
இந்த தோ்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகின. இதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் வழங்கப்பட்டன.
இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியா்களிடம் ஆா்வமுடன் பெற்றுக் கொண்டனா்.