GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
கூட்டுறவு சங்கங்களின் தோ்வுக்கு செப்.10-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூட்டுறவு சங்கங்களின் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 1,513 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 10.9.2025 அன்று முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. ஆகவே, இந்த தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 94990-55914 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.