டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
அரியலூரில் 91 மாணவா்களுக்கு கல்வி கடன் அளிப்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவா்களுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை ஆட்சியா் பொ.ரத்தினசாமி வழங்கினாா்.
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவா்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவா்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற
இக்கல்வி கடன் மேளாவில், 164 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இவற்றில் 91 மாணவா்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், செவிலியா் உள்ளிட்ட கல்விகளுக்கு ரூ.5. 65 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சங்கர சுப்ரமணியன், வங்கி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.