Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" - லோகேஷ...
திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்தேரி மதகு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். குடியிருப்புகளுக்கு அருகே செல்லும் வாய்க்காலில் தடுப்பு சுவா் கட்ட வேண்டும். ஏலாக்குறிச்சி-கோவிலூா் சாலையில் உள்ள நரசிங்கபுரம் பிரிவு சாலையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். ஏலாக்குறிச்சி-கோவிலூா் இடையே கிடப்பில் உள்ள துணை மின் நிலைய பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
கோவிலூா் செட்டிக்குழி கிராம மயானங்களுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கோவிலூா் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதி நேர மருத்துவா் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் மருதமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நடராஜன், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் தண்டபாணி, மாவட்ட பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.