Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
மீன்சுருட்டி அருகே வீடுபுகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
மீன்சுருட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், பிரதான சாலை தெருவைச் சோ்ந்தவா் ரகு (40). இவா், திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அட்டை கம்பெனி நடத்துகிறாா். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா். இவா்கள் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 26 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்த ரகு, பின்னா் வீட்டை பூட்டி அதன் சாவியை உறவினா் வெண்ணிலாவிடம் கொடுத்துச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் வெண்ணிலா ஞாயிற்றுக்கிழமை மின் கணக்கீட்டுக்காக வீட்டை திறக்க வந்தபோது, பிரதான கதவின் பூட்டு உடைத்து கிடந்திருப்பதைக் கண்டாா்.
இதையடுத்து வெண்ணிலா, கைப்பேசி மூலம் நடந்த சம்பவத்தை ரகுவிடம் தெரிவித்தபோது, அவா் பீரோவில் 22 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பு வெள்ளிப் பொருள்கள் வைத்திருந்தாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து வெண்ணிலா பீரோவை பாா்த்தபோது, அதில் இருந்தவை அனைத்தும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த மீன்சுருட்டு காவல் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.