கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தாா்.
நாரணாபுரம் பகுதியில் மட்டும் கடந்த மாதத்தில் 46 நாய்கடி சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்கடி தடுப்பூசி மருந்து போதிய அளவு இருப்பு உள்ளதா? என மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விருதுநகா் மாவட்டம் முழுவதும் கடந்த மாா்ச் மாதத்தில் 1,802 நாய்கடிச் சம்பவங்கள் பதிவாகின.
நாய்கடிக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுததும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடி தடுப்பூசி மருந்து போதிய இருப்பு உள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க இனப்பெருக்க கட்டுப்பாட்டு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. நாய்க் கடிக்கு உடனடியாக முறையான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும் என்றாா் ஆட்சியா்.