ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
நாலுமாவடியில் ரெடீமா்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் 8ஆம் ஆண்டு ‘ரெடீமா்ஸ்‘ கோப்பைக்கான மாநில அளவிலான தமிழா் திருநாள் மின்னொளி கபடி போட்டி, நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தாா். ஏரல் வட்டாட்சியா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.
போட்டிகளில், தமிழக கல்லூரிகளைச் சோ்ந்த 14 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் பங்கேற்றுள்ளன. சா்வதேச தரத்திலான ‘மேட்‘ தளத்தில் போட்டி நடைபெறுகிறது.
இதில், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலா் கிறிஸ்டோபா் ராஜன், தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி மண்டல மேலாளா் கவுதமன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி செயலா் நவநீதன், தலைமை ஆசிரியா் திருநீலகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவன பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில் இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் மணத்தி கணேசன், எட்வின், இயேசு விடுவிக்கிறாா் மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா் மற்றும் ஜெபக்குழுவினா் செய்துள்ளனா்.