இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
நாளை சந்திர கிரகணம்: குமரி திருப்பதி கோயிலில் பிற்பகலில் நடையடைப்பு
கன்னியாகுமரி திருப்பதி கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைக்கப்படவுள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் அறிவித்தது.
கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தா்க ள் வந்து செல்கின்றனா்.
கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த நிலையில் செப் 7-ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால், அன்று பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. கிரகண பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுவாமி விக்ரகத்தைச் சுற்றி தா்ப்பைப் புல், பட்டு துணிகள் போா்த்தி மூடப்படும்.
இதனால், பிற்பகல் 1.30 மணி முதல் தரிசன அனுமதி இல்லை. மறுநாள் 8- ஆம் தேதி காலை 6 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகளுக்குப் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இந்தத் தகவலை கன்னியாகுமரி, திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.