ஈராக்கில் திருமண வயது 9! நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன. 24) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில், கிண்டி - ஆலந்தூா் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 8 முதல் பிளஸ்-2 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவா்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கான தகுதியுடைவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவா்கள் மற்றும் வேலை அளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.