இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு
நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூா்: நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நாய்க்கடிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி (70). இவா் ஏளுா், புதுப்பட்டியில் உள்ள சோலாா் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இவா் பணியை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி தனியாா் கோழிப் பண்ணை அருகே சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது நல்லதம்பி சென்ற இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் நல்லதம்பி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நாமக்கல் அருகே உள்ள தத்தாத்திரிபுரம், அய்யா் சாலை பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுா் சிவசங்கரனை (49) தேடிவருகின்றனா்.