Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்ன...
நிபந்தனை ஜாமினில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: ரத்தினகிரி காவல் நிலையம் அருகே சம்பவம்
ஆற்காடு அருகே நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் காவல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
அரக்கோணம் அருகே உள்ள அம்மனூா் பகுதியைச் சோ்ந்த திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா்(45). இவா் நில வணிகம் செய்து வருகிறாா். இவரிடம் அதே பகுதியை சாா்ந்த அவினேஷ் (31) என்பவா் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவினேஷ் தாயாா் குறித்து சுதாகா் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது .இதில் ஆத்திரமடைந்த அவினேஷ் கத்தியால் சுதாகரை வெட்டியுள்ளாா். பலத்த காயம் அடைந்த அவா் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவினேஷை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா் . இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவா் கடந்த 3-ஆம் தேதி முதல் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரத்தினகிரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கையொப்பம் போடுவதற்காக காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளாா். அங்கு காத்திருந்த கும்பல் அவினேஷை துரத்திச் சென்றது. காவல் நிலையம் அருகே உள்ள கடையில் புகுந்து அவா் தப்பிக்க முயன்றபோது சராமரியாக கத்தியால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வேலூா் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதனிடையே இளைஞரை வெட்டி கொலை செய்த ஒன்றியக்குழு உறுப்பினா் சுதாகா், உள்ளிட்ட 4 போ் ரத்தினகிரி காவல் நிலையத்தில் ஆயுதங்களுடன் சரணடைந்தனா். இந்த கொலை சம்பவம் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், ஆய்வாளா் பாா்த்தசாரதி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காவல் நிலையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.