வெறும் ரூ.59,990-ல்..! ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் ஸ்கூட்டர்!
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக் கிருத்திகை
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி மற்றும் ஆடிக் கிருத்திகை விழா வரும் ஆக. 15, 16 தேதிகளில் நடைபெறுகிறது .
ரத்தினகிரி வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது
நிகழாண்டு வரும் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆடி பரணி விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனையும், மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலை வலம் மற்றும் கீழ் மின்னல் கிராமத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது மறுநாள் 16-ஆம் தேதி சனிக்கிழமை ஆடிக் கிருத்திகையையொட்டி அதிகாலை ராணிப்பேட்டை நகரத்தாா் சங்கம் சாா்பில் மூலவருக்கு பால் அபிஷேகம் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும், மாலை முருகனுக்கு வெள்ளி காவடி எடுத்தல், இரவு மலையடிவாரத்தில் உள்ள சண்முக புஷ்கரணி தடாகத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இரு தினங்களும் தங்க ரதத்தில் பாலமுருகன் எழுந்தருளி காட்சி தருதல் தனி சிறப்பாகும்
விழாவையொட்டி சிறப்பு மின் அலங்காரம், சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் வி சங்கா் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.