நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!
நியூசி.யைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக உள்ளது: ரிக்கி பாண்டிங்
நியூசிலாந்து அணியைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. நாளை லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?
ரிக்கி பாண்டிங் கூறுவதென்ன?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அணி நாளை அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், நியூசிலாந்தைக் காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி வலுவாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது: தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இரண்டு அணிகளில் தென்னாப்பிரிக்க அணியே வலுவாக இருப்பதாக நினைக்கிறேன். தென்னாப்பிரிக்க அணியில் நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. அதனால், அவர்கள் நியூசிலாந்தைக் காட்டிலும் சற்று வலுவாக உள்ளார்கள்.
இதையும் படிக்க: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்மித்
நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் அரையிறுதிப் போட்டியில் ரன்கள் குவிக்க வேண்டும். முக்கியமான போட்டிகளில் ஒவ்வொரு அணியில் உள்ள முக்கியமான வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். வில்லியம்சன் மிகச் சிறந்த ஆட்டக்காரர். அரையிறுதிப் போட்டியில் அவரது வேலை என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கும். நியூசிலாந்து அணிக்காக தனி ஒருவராக கேன் வில்லியம்சன் போட்டியை வென்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தென்னாப்பிரிக்க அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. அந்த அணியில் ரியான் ரிக்கல்டான், டெம்பா பவுமா, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் கிளாசன் போன்றோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணியைப் போன்று தென்னாப்பிரிக்க அணியிலும் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. அவர்கள் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றார்.