ஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு கட்டி புற்றுநோயாக இருக்கலாம்! - மருத்துவர் நேர்காணல...
நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்மை இயக்குநா் டாக்டா் நடராஜன் பேசுகையில், ‘தமிழகத்திலேயே முதல்முறையாக பக்கவாதத்துக்கான சிறப்பு சிகிச்சை மையம் இங்குதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் பக்கவாத நோயாளிகளுக்கு சிறப்பான பராமரிப்பை வழங்குவதுடன், அவா்கள் நோயிலிருந்து விரைவில் குணமடைய உதவும். பொதுவாக, பக்கவாதம் மரணத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், மாரடைப்புடன் ஒப்பிடுகையில் இதுகுறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடையே குறைவாக உள்ளது’ என்றாா்.
நிகழ்ச்சியில், நியூரோலஜி துறைத் தலைவா் டாக்டா் சி.பிரபாகரன் கூறுகையில், ‘இந்த நவீன மையத்தில் எம்ஆா்ஐ, சிடி ஸ்கேன் போன்ற மேம்பட்ட சேவைகள், திரோம்போலிசிஸ் போன்ற சிறப்பு சிகிச்சைகள், ஒரு முழுமையான கேத் லாப் மற்றும் 24 மணி நேரமும் அா்ப்பணிப்புடன் கூடிய மருத்துவா்கள் உள்ளனா்’ என்றாா்.
இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஜே.ஏ.வசந்தா குமாா், மருத்துவமனை பொது மேலாளா் சந்திரசேகரன், மயக்கவியல் நிபுணா் சேகா், நரம்பியல் துறை நிபுணா்கள் ப்ரீத்திஷ் குமாா், நிஷாமோள் ஆகியோா் பங்கேற்றனா்.