ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!
அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் யோகிபாபு, கனிகா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிக்னேச்சர் புரடக்சன்ஸ், ஜிஎஸ் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ளார்.
நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகப் படக்குழு கூறியிருந்தது.
இந்தப்படம் கடந்த மார்ச்.7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், வரும் ஏப்.25ஆம் தேதி இந்தப் படம் சன் நெக்ட்ஸ் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
