செய்திகள் :

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

post image

நடிகை வர்ஷினி சுரேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான மகுவா ஓ மகுவா என்ற தொடர், தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மகளே என் மருமகளே தொடராக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் பார்த்த ரேஷ்மா பசுபுலேட்டியை, இந்தத் தொடரில் நேர்மறையான பாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆவலாகவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யுவன் மயில்சாமி நடிக்கும் தங்கமகள் தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இந்தத் தொடருக்கு மாற்றாக மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

மகளே என் மருமகளே தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

The airing time of the series Makale En Marumakale, starring actress Varshini Suresh in the lead role, has been announced.

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் இணையத் தொடராக உருவாகிறதாம்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் ட... மேலும் பார்க்க

பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது...ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பராசக்தி திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. பான் இந்திய பிரபலங்கள் நடித்தி... மேலும் பார்க்க

ஓடிடியில் பறந்து போ!

இயக்குநர் ராமின் பறந்து போ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம் குழந்தை வளர்ப்ப... மேலும் பார்க்க

ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஓடிடி தேதி!

சுரேஷ் கோபி நடிப்பில் உருவான ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகி... மேலும் பார்க்க

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்தி வெளியான திரைப்ப... மேலும் பார்க்க

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஓபன் பிரிவில் இந்தியா்கள் நேரடியாக 3-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.இந்தியாவின் கிஷோா் குமாா், ஸ்ரீகாந்த், ரமேஷ் புதிலால... மேலும் பார்க்க