அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ₹10 கோடி நிதி சேர்ப்பது எப்படி?
'கடந்த 10 ஆண்டுகளாக சொந்த மண்ணை விட்டு கண் காணாத ஏதோவொரு தேசத்தில் சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு வேலை செய்து வருகிறேன். ஆனால் இதெல்லாம் எதற்கு?' பிழைப்புக்காக தாய் நாட்டை விட்டுப் போன எல்லோரும், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இப்படித் தங்களுக்குள் நினைத்திருப்பார்கள்.
தாலி கட்டிய கையோடு வெளிநாட்டுக்கு திரும்பிய கணவர்கள், தன் பிஞ்சுக் குழந்தையின் கரம் தடவ முடியாமல் ஏங்கும் அப்பாக்கள், அம்மா சமைத்த உணவு என்று கிடைக்குமோ என்று ஏங்கும் மகன்கள்... மகிழ்ச்சி, துக்கம் என எதையும் தன் உறவுகளோடு நேரே பகிர்ந்துகொள்ள முடியாமல் வெளிநாட்டில் அயராது உழைப்பது எதற்கு? நாம் விரும்பிய இதயங்கள் அங்கே நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்குத்தானே?

இன்னும் எத்தனைக் காலத்துக்கு இந்தப் போராட்டம்?
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வராது. நாம் நன்றாக சம்பாதிக்கலாம். அதை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். சிலர் சொந்த ஊரில் கொஞ்சம் நிலபுலன், வீடு, தங்கம் கூட வாங்கி இருப்பீர்கள். பலரோ NRE FD-அக்கவுண்டில் பணத்தை சேர்த்து வைத்திருப்பீர்கள்...
லட்சக்கணக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சம்பாதித்தாலும், இன்னும் பலருக்கும் சரியான முதலீட்டு வழிகாட்டல் இல்லை என்பதே உண்மை. தன் சம்பாத்தியத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும்? அதில் மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்? மகிழ்ச்சியாக ஓய்வு பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? இதை எடுத்துச் சொல்ல யாருமே இல்லை!
எனக்கு எப்படி முதலீடு செய்வதென்று தெரியவில்லை.
நான் ஊருக்குப் போன பிறகு திட்டமிடப் போகிறேன்.
என் பணம் நஷ்டமடைந்து விட்டால் என்ன செய்வது?
இப்படியான தயக்கமும் பயமும் வெளிநாடு வாழ் இந்தியர்களை முதலீடுகள் பக்கம் செல்ல விடாமலேயே வைத்துள்ளது. நீங்கள் 20 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யலாம். சரியான முதலீடுகள் மூலம் வெறும் பத்தே ஆண்டுகளில் உங்களுக்குத் தேவையான பணத்தை சேர்த்துவிடலாம்! அதற்கு உங்களுக்குத் தேவை ஒரு திட்டம்...

உங்களுக்கு ₹ 10 கோடி ரூபாய் நிதி சேர்க்க வேண்டுமா?
நீங்கள் கைநிறைய சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரா? இந்தியாவில் நிறைய சொத்துக்கள் சேர்க்க வேண்டுமா? உங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ஓய்வுக்காலத்தின் போது உங்கள் கையில் 10 கோடி ரூபாய் நிதி வேண்டுமா? மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' நடத்தும் வெபினாரில் மறக்காமல் கலந்துகொள்ளுங்கள்.
தலைப்பு: ₹ 10 கோடி நிதி சேர்ப்பது எப்படி?
நாள்: ஆகஸ்ட் 09, 2025, சனி
நேரம்: மதியம் 12:30 - 2:00 மணி (இந்திய நேரம்)
பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

* ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு நிதி சேர்க்க வேண்டும்?
* மாதாமாதம் ₹1 லட்சம் பெறுவது எப்படி?
* SIP முதலீடு செய்வது எப்படி?
* SWP மூலம் பென்ஷன் பெறுவது எப்படி?
* பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை பிளான் செய்வது எப்படி?
இதுபோன்ற அனைத்து விஷயங்களையும் 'லாபம்' வெபினாரில் தெரிந்துகொண்டு பயனடையுங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/wUer5YDVNbhAYhNbA