நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு!
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உருவாகி வருகிறது.
தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: திருமண நிகழ்வில் சிம்பு, சிவகார்த்திகேயனுடன் தனுஷ்!
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பாரா பாடல் வெளியானதிலிருந்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை யூடியூபில் 8.5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. படத்தின் அடுத்த பாடலான காதல் ஃபெயில் பாடல் விரைவில் வெளியாகிறது.
இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.