செய்திகள் :

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 3ஆவது பாடல்!

post image

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 3ஆவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பாரா பாடல் இதுவரை யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற பிப்.7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது.

இரண்டாவது பாடலான காதல் ஃபெயில் பாடல் சுமாரான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ‘ஏடி’ என்ற 3ஆவது பாடல் டிச.20ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 119-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 60-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை புதன்கிழமை அபார வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் 32 ரெய்டு புள்ளிகள், 19 டேக்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை நினைவுகள்..! மெஸ்ஸியின் வைரல் பதிவு!

கால்பந்து உலகக் கோப்பை வென்றதன் இரண்டாம் ஆண்டு நினைவுகள் குறித்து மெஸ்ஸி பதிவிட்டுள்ளார். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்..! பிரபாஸ் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

நடிகர் பிரபாஸ் நடித்துவரும் புதிய படத்தினை குறித்த வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாமென தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய பட புரோமோ!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். மிஸ்டர் பா... மேலும் பார்க்க

லாபதா லேடீஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

லாபதா லேடீஸ் திரைப்படம் ஈட்டிய வருவாய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகா் ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியுடன் ரோஜா தொடர் நாயகன்! புதிய படமா?

ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரோஜா தொடர் முடிந்த பிறகு வேறு எந்தவொரு தொடர்களிலும் சிபு சூர்யன் நடிக்க ஒப... மேலும் பார்க்க