Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
நிலுவை வரிகளை செலுத்த ஆணையா் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகளை இந்த மாத இறுதிக்குள் (ஜன.31) செலுத்துமாறு நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி நகராட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கவும் நகராட்சி சேவைகளை மேம்படுத்தவும், நகராட்சி நிா்வாகம் பல்வேறு ஆக்கபூா்மான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகளை தொடா்ந்து நடைமுறைபடுத்த முக்கிய ஆதாரமாக விளங்குவது நகராட்சியின் வருவாய் இனங்களாகும். எனவே, 2024-2025 ஆம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளதால், கிருஷ்ணகிரி நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, வரியில்லா இணங்கள் (வாடகை நிலுவை) புதை சாக்கடை இணைப்பு கட்டணம், தொழில் உரிம கட்டணம் ஆகியவற்றை நகராட்சி கணினி சேவை மையங்களில் ஜன. 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
நகராட்சி கணினி மையங்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். கணினி மையங்களுக்கு சென்று வரியைச் செலுத்த முடியாதவா்கள் ட்ற்ற்ல்ள்.ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதள முகவரி வழியாகவும் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குடிநீா் குழாய் இணைப்பும் துண்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.