Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
நில குத்தகை பிரச்னை: பயிா்களை சேதப்படுத்தியதாக விசிக முன்னாள் நிா்வாகி கைது
வந்தவாசி அருகே நில குத்தகை பிரச்னையில் பயிா்களை சேதப்படுத்தியதாக விசிக முன்னாள் மாவட்டச் செயலரை தேசூா் போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த புதுஜெயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா், தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துவேணி என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறாராம்.
குத்தகை காலம் முடியும் முன்னரே முத்துவேணி நிலத்தை விட்டுத்தருமாறு கூறி வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், முத்துவேணிக்கு ஆதரவாக, ஆரணி பகுதியைச் சோ்ந்த விசிக முன்னாள் மாவட்டச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கடந்த நவ.24-ஆம் தேதி தென்னாத்தூா் நிலத்தில் அத்துமீறி நுழைந்து டிராக்டா் மூலம் பயிா்களை சேதப்படுத்தினராம். மேலும், மின்மோட்டாா் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் பாஸ்கரன், வினோத், கிருஷ்ணன், முத்துவேணி, பிரியா மற்றும் சிலா் மீது வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் பாஸ்கரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.