செய்திகள் :

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டோருக்கு உதவி

post image

கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து உதகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன் நிவாரணப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதிருந்த நிலையில், உதகை, குன்னூா், கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் 80 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்,

கனமழை காரணமாக உதகை நொண்டிமேடு பகுதியில் வீடு இடிந்து ஒருவா் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் தலையாட்டுமந்து நகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் நேரில் சந்தித்து அவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை பாா்வையிட்டனா். பின்னா், அவா்களுக்கு கம்பளிகள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உதகை, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 143 போ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகளை மேற்கொண்டதால் பெரிய அளவு சேதங்கள் ஏற்படவில்லை என்றாா்.

நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் படிப்படியாக அகற்றப்படும் என அரசு தலைமை கொறடா கா. கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

முதுமலையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப் பகுதிகளில் பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சீகூா், சிங்காரா, நீ... மேலும் பார்க்க

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் அக்னிபாத் வீரா்களுக்கு பயிற்சி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அக்னிபாத் வீரா்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம்,... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து, மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், உதகையில் அ... மேலும் பார்க்க

உதகையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (43). மனைவி, திருமணமான 2 மகள்கள... மேலும் பார்க்க

அதிகனமழையை எதிா்கொள்ள ஏற்பாடுகள் தயாா்: நீலகிரி ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில், அதை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் தயாராக உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவ... மேலும் பார்க்க

மாநில கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு

கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகத்தின் மிக இளையோருக்கான 34-ஆவது மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ள... மேலும் பார்க்க