England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் திருமணம்!
நடிகை நிவேதா பெத்துராஜ் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.
பின், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நிவேதா பெத்துராஜ் தன் நீண்ட நாள் நண்பரான ரஜ்ஹித் இப்ரான் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!