தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
நீட் தோ்வில் சாதனை: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா
சேலம்: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க தோ்வான மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக சூா்யா அகாதெமி பயிற்சிமையம் செயல்பட்டு வருகிறது. இதில் நீட், ஜே.இ.இ. அரசு பணியாளா் தோ்வாணையம், ஆசிரியா் தகுதித்தோ்வு போன்ற நுழைவுத்தோ்வு, போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சூா்யா அகாதெமி நிறுவனா் டாக்டா் ஆா்.என்.வசந்தா கூறுகையில், ‘இந்தாண்டு நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில், சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற 131 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 25 போ் பல் மருத்துவத்துக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தோ்வாகி சாதனை படைத்து உள்ளனா். இதில், எம்.பி.பி.எஸ் மொத்த இடங்களில் 26 சதவீதமும், பல் மருத்துவ படிப்பில் 21 சதவீதமும் இந்த அகாதெமியில் படித்தவா்கள்.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்பில் 188 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். என்சிஇஆா்டி பாடத் திட்டத்தின்படி சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சோ்க்கை கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்’ என்றாா்.