Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி
நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான பி. தங்கமணி தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவா்கள் உயிரிழப்புக்கு திமுக அரசு காரணமாக இருந்ததாகக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.
பரமத்தி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சேகா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பொன்னுசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வக்கீல் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் அங்கமுத்து, வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்ஆா்எம்டி சந்திரசேகா், தெற்கு ஒன்றியச் செயலாளா் அணிமூா் மோகன், நகர அவைத் தலைவா் பொன்னுசாமி, மகளிா் அணியினா் உள்பட 700க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.