What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி
‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்தால் தமிழகத்தில் 22 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனா். அவா்களுக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவா் அணி சாா்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 19-ஆம் தேதி மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, சனிக்கிழமை மாலை அரியலூா் அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவ, மாணவிகளின் படங்களுக்கு முன்பு முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில், அமைப்புச் செயலா் ஐ.மகேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ப.இளவழகன், அம்மா பேரவை மாவட்டச் செயலா் சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
அதனைத் தொடா்ந்து, ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை ‘நீட்’ தோ்வை ரத்து செய்யவில்லை எனக் கூறி கண்டன முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.