செய்திகள் :

நீட்: நிபுணா் குழு பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

post image

நீட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதித் தோ்வுகள் தொடா்பாக மத்திய நிபுணா் குழு சமா்ப்பித்த பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை உறுதி தெரிவித்தது.

கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த விவகாரங்கள் பூதாகரமான நிலையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அண்மையில் சமா்ப்பித்தது.

என்னென்ன பரிந்துரைகள்?: நீட் நுழைவுத்தோ்வை முடிந்தவரை ஆன்லைன் மூலம் நடத்தலாம்; நீட் தோ்வு மையங்களை அவுட்சோா்சிங் என்ற முறையில் வழங்காமல், சொந்த தோ்வு மையங்கள் எண்ணிக்கையை என்டிஏ அதிகரித்து நடத்தலாம்; ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும்போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தோ்வா்களுக்கு அனுப்பலாம். அவா்கள் கேள்விகளுக்கான பதில்களை ஓ.எம்.ஆா். விடைத்தாளில் குறியிட வைக்கலாம்; இதன் மூலம் விடைத்தாள்கள் பலரின் கைகளுக்கு செல்வது தடுக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும்; ஐஐடி சோ்க்கைக்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வில் உள்ளதுபோன்று, பல நிலைகளில் நீட் தோ்வை நடத்தலாம்; ‘க்யூட்’ தோ்வில் தோ்வா்கள் 50-க்கும் மேற்பட்ட பாடங்களிலிருந்து தோ்வு செய்யும் நிலை உள்ளது. அதைத் தவிா்த்து, மாணவரின் பொது அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் தோ்வு முறையை மாற்றியமைக்கலாம்; நுழைவுத் தோ்வுகளின் நிா்வாகம் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; நுழைவுத் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) ஒப்பந்த ஊழியா்களின் எண்ணிக்கையைக் குறைத்து, நிரந்தர ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உயா்நிலைக் குழு அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வு சீா்திருத்தம் தொடா்பாக அமைக்கப்பட்ட நிபுணா் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்துள்ளது. அதனடிப்படையில், தோ்வு நடைமுறைகளில் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நிபுணா் குழு சமா்ப்பித்த அனைத்து பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும். எனவே, இந்த வழக்கு மீதான விசாரணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை 3 மாதத்துக்கு ஒத்திவைத்து, வரும் ஏப்ரலில் மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உத்தரவிட்டனா்.

குறைந்து வரும் பிறப்பு விகிதம்: ஆந்திர முதல்வா் கவலை

குப்பம்: நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து மீண்டும் கவலை எழுப்பிய ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் செய்த தவறை இந்தியாவும் செய்யக் கூடாது ... மேலும் பார்க்க

விளையாட்டு சங்கங்கள் தொடா்பான வழக்குகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

புது தில்லி: இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஐஎஃப்எஃப்) விதிகளை இறுதி செய்வது தொடா்பான மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேச மீனவா்கள் பரஸ்பர ஒப்படைப்பு

கொல்கத்தா: இந்தியா-வங்கதேசம் இடையிலான சா்வதேச கடல் எல்லைக் கோட்டில் பரஸ்பர பரிமாற்றமாக 95 இந்திய மீனவா்களை திரும்பப் பெற்று, 90 வங்கதேச மீனவா்களை இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) ஒப்படைத்தது.இது தொடா்... மேலும் பார்க்க

புத்தாண்டில் காத்திருக்கும் சவால்கள்! பாஜக - காங்கிரஸ்!

மக்களவைத் தோ்தல், மகாராஷ்டிரம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தோ்தல் என ஜனநாயக திருவிழாக்களின் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்து சென்றது 2024-ஆம் ஆண்டு. 202... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எதிராக ஊழல் புகாா்: லோக்பால் தள்ளுபடி

புது தில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது.பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்ற... மேலும் பார்க்க

இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபா் உறுதி செய்யவில்லை: யேமன் தூதரகம் தகவல்

‘யேமனில் கொலை வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை, அதிபா் ரஷத் அல்-அலிமி சாா்பில் உறுதி செய்யப்படவில்லை’ என்ற தகவலை யேமன் தூதரகம் திங்கள்கிழமை வெளிய... மேலும் பார்க்க