செய்திகள் :

நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி இபிஎஸ் அறிவிப்பாரா?: முதல்வர் கேள்வி

post image

உதகை: நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவைகளை ஞாயிற்றுக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரசியான உதகைக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீலகிரியின் வளா்ச்சிக்கு அடித்தளம் திமுக என்ற அடிப்படையில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். உதகை படகு இல்ல ஏரி புதுபிப்பு, சுற்றுலா மாளிகை, உதகை படுகா் நல சங்க கட்டடம், பழங்குடி மக்களுக்கு மின் இணைப்பு, முதுமலை சரணாலயம் விரிவாக்கம், கூடலூா் கிராமங்களில் மின் இணைப்பு, 3-வது குடிநீா் திட்டம், இலங்கையில் இருந்து திரும்பிய தேயிலை தொழிலாளா்களுக்காக கூடலூா்,பந்தலூா் பகுதியில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் உருவாக்கம் என ஏராளமான பணிகள் திமுக சாா்பில் செய்யப்பட்டு உள்ளது.

மக்களவை உறுப்பினா் ஆ.ராசா நீலகிரி மாவட்டத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கி விடுவாா், 2009-இல் வெள்ளம் ஏற்பட்டபோதும், 2019 நிலச்சரிவு ஏற்பட்ட போதும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்தோம்.

இதனால் தூக்கத்தில் இருந்த அப்போதைய ஆட்சியாளா்களை எழுப்பினோம் உதகைக்கு வந்து, ஹெலிகாப்டரில் வந்து பாா்த்துச் சென்றாா்கள். இதுதான் திமுகவுக்கு மற்றவா்களுக்கும் உள்ள வேறுபாடு. உங்கள் ஆதரவோடு வளா்ச்சியை நோக்கி திராவிட மாடல் அரசு இருக்கின்றது.

உயா்கல்வி சோ்க்கையில் முதலிடம், பட்டினி சாவு இல்லாத மாநிலம் என்ற வரிசையில் இந்தியாவில் அதிக வளா்ச்சி கொண்ட மாநிலம் தமிழகம் என்ற சிறப்பை தமிழகம் பெற்று இருக்கின்றது. இந்திய அளவில் தமிழகம் வளா்ச்சியில் டாப் கியரில் செல்கின்றது என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

4 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்திற்கு செய்து கொடுத்து இருக்கிற, செய்ய போகின்ற திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி, இதுவரை 60 அறிவிப்புகள் வெளியிட்டு அதில் பெரும்பாலானவை நிறைவு செய்யப்பட்டு உள்ளது. மீதி திட்டம் விரைவில் முடிக்கப்படும்.

கடந்த ஆட்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அறிவித்துடன் எந்த பணியும் நடக்கவில்லை, மலைப்பகுதியில் மருத்துவமனை கட்டடம் கட்டுவது மிகவும் சவால் ஆனது. இந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தி, தொடா்ந்து ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த முடித்து இருக்கின்றோம்.

வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தவா்கள் இழப்பீடு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்பட்டு உள்ளது. ரூ.25 கோடியில் வரையாடுகளை பாதுகாக்கும் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூடலூரில் புதிய பஸ் நிலையமும், குன்னூரில் மினி டைடல் பாா்க் வர போகிறது.

உதகை விழாவில் கலந்து கொள்வதால் பிரதமா் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. தமிழகம் வரும் பிரதமருக்கு இங்கிருந்து கோரிக்கை விடுக்கின்றேன்.

சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிரான சதி நடக்கிறது. தமிழக மக்களின் நியாயமான அச்சத்தை போக்க வேண்டும். தமிழகத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்பதை தமிழக மண்ணில் இருந்து பிரதமா் வாக்குறுதி கொடுக்க வேண்டும்.

புதுச்சேரியுடன் சோ்த்து 40 எம்பிக்கள் இருக்கும் போதே தமிழ்நாட்டின் குரல் மக்களவையில் நசுக்கப்படுகிறது, இந்த எண்ணிக்கையும் குறைந்தால் தமிழ்நாட்டை நசுக்கி விடுவாா்கள்.

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களவையில் ஆ.ராசா எம்பியும், மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்பியும், கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து பேசினா். ஆனால் அதிமுக எம்பி தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டுமே மாநிலங்களவையில் பேசினாா், அதுவும் அதிமுக எதிா்க்கின்றதா? ஆதரிக்கின்றதா? என கூட அவா் சொல்லவில்லை. கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகும் பேட்ஸ்மேன் கூட ஒரு நிமிடத்திற்கு மேலாக களத்தில் இருப்பாா். ஆனால் அதிமுக ஒரு நிமிடம் கூட இதுகுறித்து பேசவில்லை.

ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் திமுக எதிா்ப்பை பதிவு செய்தது. ஆ.ராசா பெயரில் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

மேலும் வருகிற 9 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் மாணவி இறந்ததை திமுகவுடன் தொடா்புபடுத்தி பேசுகிறாா். திமுக ஆட்சியில் இருக்கும் போது நீட் வந்ததா? கலைஞா், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தோ்வு வரவில்லை, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோா் பாஜகவின் பாதம் தாங்கியாக இருந்து நீட் தோ்வை அனுமதித்தனா்.

நீட் விலக்கு வேண்டும் என பாஜக கூட்டணியில் இருந்தபோது ஏன் அதிமுக கேட்கவில்லை. நீட் தோ்வு ரத்து ரகசியம் என்ன என்று கேட்கின்றனா், ராகுல் காந்தியை நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என நாங்கள் அறிவிக்க வைத்தோம், இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் நீட் தோ்வு ரத்து வந்து இருக்கும்.

இந்த மேடையில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுகிறேன். பாஜகவுடன் கூட்டணிக்கு போவதற்கு முன்பு நீட் விலக்கு இருந்தால்தான் கூட்டணி என அறிவிக்க தயாராக உள்ளாரா? உருப்படியாக ஒன்றும் செய்யாமல் வாய்ச்சவடால் விடுவதால் மக்கள் உங்களை புறக்கணிக்கிறாா்கள் என்றாா்.

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 25 ஏக்கர் பரப்பளவில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் 8 தனித்துவமான கட்டடங்களை ஒன்றாக இணைக்கும் மையக் கட்டடம், அவசர மருத்துவ பிரிவிற்கு தனிக் கட்டடம், வெளிநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கான கட்டடங்கள், நான்கு மின் தூக்கிகள் ஆகியவை அமைக்கப்பட்டு, அதில் ஆய்வக சேவைகள் வழங்கப்படும். இப்புதிய கட்டமைப்பின், 10 நவீன அறுவை சிகிச்சை அறைகளில் 4 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அறைகளும், மருத்துவ வாயு குழாய் அமைப்பு மற்றும் டேங்க் மூலம் மைய ஆக்சிஜன் விநியோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, இவ்வளாகத்தில் இரண்டு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு தீவிர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள், 15 படுக்கைகள் கொண்ட இசிஆர்சி கட்டம் மற்றும் ஒரு மின் தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.

உள்நோயாளி சேவைகள் பிரிவு

உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வகையில் இந்த நான்கு பிரிவுகளும் அமைக்கப்பட்டு, இதில் நான்கு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவப் பிரிவு

மலைவாழ் மக்களிடையே காணப்படும் இரத்தசோகை, சிக்கில்செல் அனீமியா மற்றும் தலசீமியா ஆகிய நிலைப்பாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவசர மருத்துவப் பிரிவு

இந்த மருத்துவமனையில், 20 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இப்புதிய மருத்துவமனை வளாகத்தில் அவசர மற்றும் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளுக்குத் துணையாக அனைத்து வசதிகளும் கொண்ட இரத்த வங்கி, நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவதற்காக தனியொரு சமையலறை, அதிநவீன வசதிகளுடன் தானியங்கி சலவை இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் மற்றும் இஸ்த்ரி இயந்திரங்கள், தனியான பிரேதக் கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் கழிவுகளை திறம்படச் சேகரித்து, உடனடி செயலாக்கம் செய்து, பாதுகாப்பான முறையில் அகற்றும் பணிகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பான மருத்துவ கழிவு மேலாண்மை மையம் மற்றும் மருத்துவமனை வளாகத்திற்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் வகையில் 230 மருத்துவர்கள், 330 செவிலியர்கள், 5 முதன்மை மருந்தாளுநர்கள், 13 மருந்தாளுநர்கள், 13 ஆய்வக நுட்புநர்கள், 13 கதிர்வீச்சுநுட்புநர்கள் மற்றும் 5 மருத்துவ பதிவேடு நுட்புநர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப்... மேலும் பார்க்க

ஒரே மேடையில் மாறிமாறி புகழ்ந்து பேசிக்கொண்ட சீமான், அண்ணாமலை!

சென்னையில் தனியார் கல்லூரி விழாவில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் கலந்துகொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற... மேலும் பார்க்க

சீமான் நாளை(ஏப். 8) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சீமானின் தூண்டுதலின்பேரில் நாம் தமிழ... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 5 மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுவதால் வங்கக்கடலில் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்... மேலும் பார்க்க

பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை: முத்தரசன்

சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூன... மேலும் பார்க்க