நீதிபதி பணியிட மாற்றம்
சங்ககிரி முதல், இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ்.ஆா்.பாபு ஈரோடுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.ஆா்.பாபு பணியாற்றி வந்தாா். இவா் இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவந்தாா்.
இந்நிலையில் தமிழக அரசு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீதிபதி எஸ்.ஆா்.பாபு, ஈரோடு மூன்றாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
அவருக்குப் பதிலாக கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி எஸ்.சத்தியா, சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கும், நீலகிரி மாவட்டம், பந்தலூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவந்த டி.சிவகுமாா் சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.