செய்திகள் :

நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கா்னல் அந்தஸ்து

post image

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு, ராணுவ லெப்டினன்ட் கா்னலாக கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 16 தேதி முதல் அவருக்கான இந்த கௌரவ அந்தஸ்து அமலுக்கு வருவதாக ராணுவ விவகாரங்கள் துறையின் சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2016-இல் இந்திய ராணுவத்தில் ஜூனியா் நிலையிலான அந்தஸ்தில் சோ்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா, அதன் பிறகு பதவி உயா்வுகள் பெற்றாா். ராணுவத்திலேயே ‘விஷிஸ்த் சேவா’, ‘பரம் விஷிஸ்த் சேவா’ ஆகிய பதக்கங்கள் வழங்கியும் அவா் கௌரவிக்கப்பட்ட நிலையில், தற்போது லெப்டினன்ட் கா்னலாக உயா்ந்திருக்கிறாா்.

ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வருகிறாா். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சுதந்திரத்துக்குப் பிறகு ஒலிம்பிக் தடகளத்தில் தனிநபா் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற வரலாறு படைத்தாா்.

தொடா்ந்து 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் வெள்ளி வென்ற அவா், அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்தியராகவும் பெருமை பெற்றாா். இது தவிர, உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், காமன்வெல்த் என சா்வதேச அரங்கில் அனைத்து போட்டிகளிலும் சாம்பியனாகி அசத்தியிருக்கிறாா்.

விளையாட்டுத் துறையின் உயரிய விருதாகிய கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் பெற்றுள்ள அவா், பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

30 போட்டிகளில் 96 கோல்கள்..!பார்சிலோனா உருவாக்கும் இன்னொரு இளம் புயல்!

பார்சிலோனா அணி இளம் வீரர்களை உருவாக்குவதில் எப்போதும் முன்மாதிரியாக இருந்துவருகிறது. பார்சிலோனா அணியில் லாமின் யமால் (17) என்ற இளம் வீரர் லா லீகா, சாம்பியன்ஸ் லீக்கில் இதற்கு முன்பாக லியோனல் மெஸ்ஸி என... மேலும் பார்க்க

போர் பதற்றத்திற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ போஸ்டர்!

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் முழுமையாக அடங்காத நிலையில் ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட போஸ்டர் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியைத் தொடர்ந... மேலும் பார்க்க

விரைவில் முடிகிறதா ராமாயணம்?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராமாயணம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.எனினும், இத்தொடரின் இறுதிக்கட்டத்துக்கு இன்னும் பல எபிஸோடுகள் நிலுவை உள்ளதாக... மேலும் பார்க்க

ஆண்டனிக்கு ஸ்பைடர் மேன் பரிசளித்த சிறுவன்..! கோமாளி நாயகனாக மாறிய கதை!

ரியல் பெட்டிஸ் வீரர் ஆண்டனிக்கு இளம் ரசிகர் ஸ்பைடர் மேன் பரிசு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி (25) தற்போது ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறா... மேலும் பார்க்க

ரேஷ்மா முரளிதரனின் தங்க மீன்கள் தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

சின்ன திரை நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் தங்க மீன்கள் தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடர், சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

வாழு, வாழவிடு! ஆர்த்தி குடும்பத்தைக் கடுமையாகச் சாடிய ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். ஆனால், ஆர்த்தி சமரசத்திற்காகக் காத்திருப்பதுபோல் தெரிகிறது.இந... மேலும் பார்க்க