செய்திகள் :

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இருப்பினும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

வெப்பநிலை நிலவரம்:

அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் : 37.5° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி : 21.5° செல்சியஸ்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் அதிகரித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் 3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 3° செல்சியஸ் அதிகமாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 1 - 2° செல்சியஸ் குறைவாகவும் இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 - 38° செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 - 38° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32 - 36° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

23-03-2025 முதல் 25-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

26-03-2025 மற்றும் 27-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

23-03-2025 மற்றும் 24-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

பாகிஸ்தானில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (23-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (24-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35- 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவி... மேலும் பார்க்க

சென்னைக்கு வந்த விமானத்தில் டயர் வெடித்து விபத்து!

சென்னை: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று(மார்ச் 30) காலை வந்த விமானத்தின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!

தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,500 ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கு. இராசசேகரன்மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 587 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 30) காலை 108.25 அடியில் இருந்து 108.20 அடியாக சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் 4-ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!

நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும்(மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏ... மேலும் பார்க்க

உகாதி: தலைவா்கள் வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தெலுங்கு, கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உ... மேலும் பார்க்க