செய்திகள் :

நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!

post image

நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல  கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும்   முட்டைக்கோஸ் கேரளம், கா்நாடகம், சென்னை கோயம்பேடு ஆகிய சந்தைகளில் விற்கப்பட்டு  வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது  பனிப் பொழிவு காணப்பட்டதால் கடந்த வாரம் ரூ.5 முதல் ரூ.10  வரை தரத்துக்கு ஏற்ப விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை சந்தை விலை நிலவரப்படி முட்டைக்கோஸுக்கு  ரூ.3 முதல் ரூ.8 வரை  மட்டுமே விலை  கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விலை அறுவை கூலிக்கும், போக்குவரத்து  செலவுக்கும்கூட  கட்டுபடியாகாததால்  சிலா் கால்நடைகளுக்கு தீவனமாக சாலையோரத்தில்  கொட்டிச்  செல்கின்றனா்.

உதகையில் தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆட்சியா் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் ... மேலும் பார்க்க

மலைவேடன் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்று வழங்க மூன்று போ் குழு அமைப்பு!

நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கும் விவகாரம் தொடா்பாக மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உ... மேலும் பார்க்க

கூடலூரில் அரசு ஊழியா் சங்கத்தினா் போராட்டம்!

கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி சங்க நூற்றாண்டு விழாக் கூட்டம்!

கூடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்கம் கடந்து வந்த பாதைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க