செய்திகள் :

நீலகிரி: `விவசாயம் செழிச்சு, பருவம் தவறா மழை பெய்யணும் ஹெத்தையம்மா...' - களைகட்டிய அறுவடை திருவிழா

post image

நீலகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குலதெய்வமாக போற்றி வணங்கி வரும் இந்த மக்கள், விதைப்பில் தொடங்கி அறுவடை வரை ஒவ்வொரு நிகழ்வையும் குல தெய்வத்தை வணங்கிய பிறகே மேற்கொண்டு வருகின்றனர்.

காடெ ஹெத்தையம்மன் திருவிழா

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்குந்தா கிராமத்தில் உள்ள காடெ ஹெத்தையம்மன் கோயிலில் 'தெவ்வ ஹப்பா' எனப்படும் அறுவடை திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. அறுவடை திருவிழா பிண்ணனி குறித்து பகிரும் கீழ் குந்தா கிராம மக்கள், " நுாற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ‘அரிக்கட்டுதல் மற்றும் ஹெத்தை அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் பனகுடி சிவன் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பனகுடியில் இருந்து ஹெத்தையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

காடெ ஹெத்தையம்மன் திருவிழா

14 ஊர்களில் இருந்து பாரம்பர்ய வெள்ளை உடைகளை உடுத்தி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மனமுருகி அம்மனை வணங்கினர். இதனைத் தொடர்ந்து, ‘அரிக்கட்டுதல்’ நிகழ்ச்சி தொடங்கியது. விவசாயம் செழிக்க பருவமழை தவறாமல் பொழிய வேண்டும் என புதிதாக விளைந்த கோதுமை, திணை உள்ளிட்ட பயிர்களைக் கொண்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் படுகர்‌ சமுதாய மக்களின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கோயில் அறங்காவலர்கள் மற்றும் கீழ்குந்தா ஊர் பொதுமக்கள் செய்திருந்தோம்" என்றனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மக்கள் சார்பில், திருப்பதியில் பிக் ஷா வந்தனம் என்ற நிகழ்ச்சி வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து மதுரை பிக் ஷா வந்தன கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் பெற்ற பக்தர்கள்!

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.குரு பூர்ணிமா சிறப்பு பூஜைஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத... மேலும் பார்க்க

உடனடியாக திருமணம் நடக்கவும்; திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்; கல்யாண பிராப்த பூஜை

உடனடியாக திருமணம் நடக்கவும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்! கல்யாண பிராப்த பூஜை! இங்கு கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் நடைபெறும் கல்யாண ... மேலும் பார்க்க

சிவகங்கை: 2000 போலீஸார் பாதுகாப்பு; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருத்தேரோட்ட ஏற்பாடு!

நாளை காலை நடைபெறவுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.இதில் 25 ஆயிரத்திற்கும்... மேலும் பார்க்க