செய்திகள் :

நூறு நாள் வேலைத் திட்ட நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு முடக்கினாலும், செயல்பாடுகளில் நமது மாநிலம் தொடா்ந்து மிளிா்கிறது. அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிக அளவு நிதியை பயன்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது.

குறிப்பாக, அந்தத் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கெனவே பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் அதிக அளவு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா் என்று பதிவிட்டுள்ளாா்.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்காக, கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டுக்கு ரூ.8,549 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, நிகழ் நிதியாண்டில் ரூ.4,354 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப... மேலும் பார்க்க

கவின் உடல் ஒப்படைப்பு! இன்று தகனம்!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடல் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த... மேலும் பார்க்க

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):1. சுன்சோ... மேலும் பார்க்க

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மே... மேலும் பார்க்க

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-... மேலும் பார்க்க