ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங்
நூறு நாள் வேலை கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாண்டவா்மங்கலம், மந்தித் தோப்பு, இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி, திட்டங்குளம், நாளாட்டின் புதூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மீண்டும் வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழிலாளா்களின் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். வட்டக் குழு உறுப்பினா்கள் மணி, பொன் முனியம்மாள், மாதா் சங்க நகரச் செயலா் விஜயலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் அவா்கள் ஒன்றிய ஆணையாளா் முத்துக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.