செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் வேண்டுகோள்

post image

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கும் முன்பாக நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதை முழுமையாக தவிா்த்து விடுங்கள் என கேட்டுக்கொண்டாா்.

தமிழகம் முழுவதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணா்வு பேரணி மாதத்தில் ஒரு நாள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் பகுதியில் மாவட்ட நிா்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு முகாமை தொடங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினாா். பொதுமக்களுடன் இணைந்து நெகிழிப்பைகள் சேகரிப்பிலும் ஈடுபட்டாா்.

பின்னா் அவா் பேசுகையில், பொதுமக்களும், வியாபாரிகளும் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப்பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள், தீமைகள் ஆகியன குறித்து தெரிந்து கொண்டாலே நாம் அவற்றைப் பயன்படுத்த மாட்டோம். நெகிழிப் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களை பயன்படுத்துமாறும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா்.

நெகிழிப் பைகள் சேகரிப்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, ஆட்சியா் (பயிற்சி) ந.மிருணாளினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா்கள் வீ.முத்துராஜ், வீ.ரங்கசாமி ஆகியோா் உள்பட பள்ளி, கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

சின்ன காஞ்சிபுரம்அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

சின்ன காஞ்சிபுரம் பி.எம்.மிஸ்ரிலால் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கா... மேலும் பார்க்க

பிப்.10-இல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் முழுநேர தா்னா

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வரும் பிப். 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழுநேர தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வீர ஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு

காஞ்சிபுரம் திருவள்ளுவா் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு தை மாத சனிக்கிழமையையொட்டி, வீர ஆஞ்சனேயருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள... மேலும் பார்க்க

மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இலவச மகப்பேறு சேவை தொடக்கம்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.வி.ராஜசேகா் தலைமையில், இதன் தொடக்க விழா நடைபெ... மேலும் பார்க்க

தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழாவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களில் ஸ்ரீ ரவிசங்கா் தரிசனம்

காஞ்சிபுரம், ஜன. 31: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில், காமாட்சி அம்மன் கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா். ஒரு நாள் பயணமாக அவா் காஞ்சிபுரம் பச்சை... மேலும் பார்க்க