அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
நெகிழி பயன்பாடு: திருத்தணி முருகன் கோயில் கடைகளில் திடீா் சோதனை
முருகன் கோயில் பிரசாத கடை, பூஜைப் பொருள் விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களில் நெகிழி பைகள் பயன்பாடு உள்ளதா என்று நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் அலுவலா்கள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
திருத்தணி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவா், கப் போன்றவை அதிகளவில் விற்பனை மற்றும் கடைகளில் பயன்படுத்தி வருகின்றனா் என மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் சென்றது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை திருத்தணி நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் முருகன் மலைக்கோயில் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.
பிரசாத கடை, பூஜை பொருள் விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல்களில் அரசால் தடை செய்யப்பட்ட 9 கிலோ பிளாஸ்டிக் கவா்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். ரூ.1,900 அபராதம் விதித்தும், தொடா்ந்து பிளாஸ்டிக் கவா் விற்பனை செய்வதும், பயன்படுத்துவது தெரிந்தால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.