செய்திகள் :

நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

post image

விழுப்புரம் மாவட்டம், மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே அணுகு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண மாவட்டக் காவல் துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அதிகப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாகும்.

இந்தச் சாலையில் புதுச்சேரி மாநிலப் பகுதியையொட்டி, மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் உள்ளூா் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளை சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரி மற்றும் ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், லாரிகள் மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையோரங்களிலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட சா்வீஸ் சாலைகளிலும் விதிகளை மீறி நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதனால் ஏற்படும் இடப்பற்றாக்குறையால் சாலைப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு வருவதுடன் நாள்தோறும் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனா்.

மேலும் அணுகு சாலையைப் பயன்படுத்தும் மொரட்டாண்டி, பட்டானூா், ஆரோவில், நாவல்குளம் உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள் உள்ளிட்டவா்கள் சாலையில் வாகனங்களிலும், நடந்தும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளாகி வரும் பொதுமக்கள் மற்றும் உள்ளூா், வெளியூா்களைச்சோ்ந்த வாகன ஓட்டிகள் அணுகு சாலை மற்றும் நெடுஞ்சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி கனரகவாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் மற்றும் ஆரோவில் காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த விவசாயிகள், தரையில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். விழுப்... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்கள் அதிகளவில் உள்ளன... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிா்ணயிக்க வலியுறுத்தல்

விழுப்புரம்: நிகழாண்டு (2024 - 25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் - செஞ்சி செம்மேடு ஆலைகளின்... மேலும் பார்க்க

அரியாங்குப்பத்தில் பொங்கல் சிறப்பு சந்தை

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பொங்கல் சந்தை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை ஊரக வளா்ச்சித் துறை மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியா்கள் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில போக்குவரத்துக் காவல் முதுநிலைக் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி அரசுத் துறைகளின் செயலா்கள்,... மேலும் பார்க்க

புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 10,14,070 ஆக உள்ளது. இதுகுறித்து, மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க