'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத...
நெமிலியம்மன் திருவிழா
ஆம்பூா் அருகே பள்ளித்தெரு அருள்மிகு நெமிலியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு கிராமத்தில் நெமிலியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கரக ஊா்வலம், மாவிளக்கு ஊா்வலம், தடுக்கு மாலை ஊா்வலம் நடந்தது. பகதா்கள் அம்மனுக்கு தடுக்கு மாலை, மாவிளக்கு சமா்ப்பித்தனா்.
திருவிழாவில் உமராபாத், கடாம்பூா், நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சின்னவரிகம், சாத்தம்பாக்கம் , பனங்காட்டூா், மிட்டாளம், பைரப்பள்ளி, வன்னியநாதபுரம், கன்றாம்பல்லி, மேகனாம்பல்லி, ரகுநாதபுரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். வாணவேடிக்கை நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரியும் நடந்தது .