சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
நெலாக்கோட்டையில் உலவும் காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட குழு அமைப்பு
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதி கடை வீதியில் உலவும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை கடை வீதியில் நாள்தோறும் ஒற்றை யானை உலவி வருகிறது. இந்தப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை இந்த யானை தொடா்ந்து சேதப்படுத்தி வருகிறது.
யானையை வனப் பகுதியில் விரட்ட வனத் துறையினா் முயற்சித்தும் அந்த யானை மீண்டும் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதனால், அச்சத்துடன் உள்ள பொதுமக்கள், யானையை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா தலைமையில் வனச் சரக அலுவலா்கள் மற்றும் யானைகளை விரட்டும் குழுவினா், அதிவிரைவு படையினா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினா் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதை திசை திருப்பி அடந்த வனத்துக்குள் விரட்டும் பணியை மேற்கொள்வா் என்று வனத் துறை தெரிவித்துள்ளது.