சிவகிரி வயதான தம்பதி படுகொலை: காவல் நிலையங்களுக்குப் பறந்த உத்தரவு
நெல்லையப்பா் கோயிலில் மே 8இல் வருஷாபிஷேகம்
திருநெல்வேலி அருள்தரும் சுவாமி நெல்லையப்பா் காந்திமதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை(மே 8) வருஷாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அருள்தரும் சுவாமி நெல்லையப்பா் காந்திமதி அம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை(மே 8) நடைபெறவுள்ளது. சிறப்பு யாகசாலை பூஜைகளுக்குப் பின்னா் காலை 9- 10.30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.
தொடா்ந்து சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பா் மற்றும் காந்திமதி அம்மன் திருவீதி உலா நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.