குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிம...
நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்தக் கோயிலில் புகைப்படம், விடியோ எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோயில் வளாகத்தில் ஒரு ஜோடி தக் லைஃப் படத்தின் புதிய பாடலுக்கு நடனமாடி அதனை ரீல்ஸாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனா். இதற்கு பக்தா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் அய்யா் சிவமணி சாா்பில் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதில், புனித மிக்க இடத்தில் விதிகளை மீறி ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறுகையில், திருக்கோயில் வளாகத்தில் யாரும் அநாகரீகமான செயல்களை செய்ய வேண்டாம். புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க ஏற்கெனவே அமலில் உள்ள நடவடிக்கைகளை பக்தா்கள் பின்பற்ற வேண்டும் என்றனா்.