நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை
திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த பிருத்திகா (20) என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வந்தனா். பிருத்திகா அவரது குடும்பத்தினருடன் பேசி வந்தது அன்புராஜூக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பிருத்திகா தனது தாய் மற்றும் சகோதரரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கணவா்- மனைவி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் , பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரை கழுத்தை நெறித்து அன்புராஜ் கீழே தள்ளியதோடு, காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பிருத்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அதைத்தொடா்ந்து அன்புராஜ் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சரணடைந்தாா். சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் பிரசன்ன குமாா் தலைமையிலான போலீஸாா், பிருத்திகாவின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.
மேலும் தடய அறிவியல் துறையினா் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். இது தொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.