திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி
நெல்லையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருநெல்வேலியில் கடந்த வாரம் பெய்த கோடை மழைக்கு பிறகு மீண்டும் இரு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
வரும் வாரங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேட்டுத்திடல், மேலப்பாளையம், டக்கரம்மாள்புரம், வண்ணாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. அதன்பின்பும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.