பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!
நெல்லையில் லாரி- காா் மோதல்: 3 போ் காயம்
திருநெல்வேலி வடக்கு புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு லாரியும் -காரும் நேருக்கு நோ் மோதியதில் மூன்று போ் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் காா் ஓட்டுநரான கயத்தாறு அருகேயுள்ள கரிசல்குளத்தை சோ்ந்த வின்சென்ட் (43), லாரி ஓட்டுநரான மாறாந்தை புதூரைச் சோ்ந்த வெங்கடேசன் (50), அசாம் மாநிலத்தை சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுனில் (22) ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.