செய்திகள் :

நெல்லை: கோயில் திருவிழா.. இருதரப்பு பிரச்னையால் அன்னதான பாத்திரங்களை அப்புறப்படுத்திய காவல்துறை!

post image

நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் பதி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் சென்று வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டு விழாக்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவையொட்டி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்களில் ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், அய்யா வைகுண்டர் கோயிலில் வழிபாடு நடத்த மட்டுமே நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில், அன்னதானம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கும் அனுமதிக்கக்கூடாது என எதிர் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனால் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதில், வழிபாடு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அன்னதானம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளை நடத்தக் கூடாது எனவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஆனாலும் உள்ளூர் மக்கள் சிலர் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பினரின் சம்மதத்துடன் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்தச் சூழலில் பேச்சு வார்த்தையை மீறி ஒரு தரப்பினர், கோயில் வளாகத்தில் அன்னதானம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இன்று சமையல் வேலைகள் தொடங்கிய நிலையில், எதிர்த்தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்ததால் காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை அப்புறப்படுத்திச் சென்றனர். அதனால் பக்தர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அய்யா வைகுண்டர் பதியில் சக்கரபாவனி நடந்து கொண்டிருந்தது. அப்போது, அன்னாதன நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்ததை அறிந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் தரப்பில் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Mark Zuckerberg: மனைவியின் பிறந்த நாள்; மாஸான சர்ப்ரைஸ் கொடுத்த மார்க் - வைரலாகும் வீடியோ

மெட்டா நிறுவன தலைவர் மார்க் சக்கர்பெர்க் தன் மனைவியின் பிறந்தநாளில் சர்பரைஸ் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிசில்லா என்பவரைத் தி... மேலும் பார்க்க

Trump : 'ஜெலன்ஸ்கி ஏன் கோட் சூட் அணியவில்லை?' - பத்திரிகையாளரின் கேள்வியும் மக்களின் ரியாக்சனும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்புதான் நேற்று( பிப்ரவரி 1) முழுவதும் டாக் ஆஃப் தி வொர்ல்டு ஆக இருந்தது. இந்நிலையில், அந்த சந்திப்புக்கு ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியா... மேலும் பார்க்க

ஹோட்டலில் கொல்கத்தா பிரியாணியை பார்சல் செய்த இங்கிலாந்து மன்னர்... அரசக் குடும்பத்தினர் கூறுவதென்ன?

லண்டனின் கார்னபி தெருவில் இயங்கி வருகிறது டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் ஹோட்டல். இந்தியாவின் பிரபலமான பாலிவுட் நடிகை அஸ்மா தான் இந்த ஹோட்டலின் உரிமையாளர்.இவர் கொல்கத்தாவில் உள்ள லா மார்டினியர், லோரெட்டோ கல்லூ... மேலும் பார்க்க

Trump Gaza: கண்டனத்துக்குள்ளான டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட 'AI' வீடியோ - என்னதான் இருக்கிறது அதில்?

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இந்திய ஆவணமற்ற குடியேறிகளை விலங்கிட்டு அனுப்பி... மேலும் பார்க்க

Dhoni : ``பட்டர் சிக்கனும் பட்டர் பனீரும் ஒன்றல்ல..." - வைரலாகும் தோனியின் ஃபேவரைட் டிஷ் வீடியோ

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோனியை எந்த அளவுக்கு தெரியுமோ, அதே அளவுக்கு அவர் ஒரு சிக்கன் பிரியர் என்றும் தெரியும். அவரே பல இடங்களில் அதைக் கூறியிருக்கிறார். முன்னாள் இந்தியா வீரர் ராபின் உத்தப்பா ... மேலும் பார்க்க

சீனா: "நிறுவனம் சொல்லும் நேரத்தில்தான் கழிவறையைப் பயன்படுத்தணும்" - ஊழியர்களுக்கு நூதனக் கட்டுப்பாடு

தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் வேலை பார்க்கும் நேரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்கள் கழிவறை பயன்படுத்தும் நேரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெற்கு சீனாவில் உள்ள ஒரு நிறுவனம்.போஸான் மற்றும் க... மேலும் பார்க்க