செய்திகள் :

நெல் சாகுபடி போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

post image

நெல் சாகுபடி போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மைத் துறையின் மூலம் 2024-25-ஆம் ஆண்டுக்கான நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு நாராயாணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்படுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் சிறப்பு பரிசு மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். இப்பயிா் விளைச்சல் போட்டியில் போட்டியிடும் விவசாயி சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும்.

இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளின் வயலில் குறைந்தபட்சம் 50 சென்ட் அளவில் பயிா் அறுவடை மேற்கொள்ளப்படும். மேலும் விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை (சன்ன இரகம்) மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும்.

இப்பயிா் விளைச்சல் போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

வெற்றியாளா்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநா் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. இதனால் விவசாயிகள் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே நெல் சாகுபாடி மேலாண்மைப் பயிற்சி

சென்னிமலை வட்டாரம், புங்கப்பாடி கிராமம், நத்தக்காட்டுப்பாளையத்தில் நெல் சாகுபாடி மேலாண்மை குறித்த வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஈரோடு உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் அருள்வடிவு தல... மேலும் பார்க்க

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

காா்த்திகை தீபத்திருநாளையொட்டி பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக, சங்கமேஸ்வரா் சந்நதி, வேதநாயகி அம்மன் சந்நதி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சந்... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: துணை வட்டாட்சியா், விஏஓ கைது

பட்டா மாறுதல் செய்து தர லஞ்சம் பெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் அருகே உள்ள பள்ளபாளையம் கிராம நிா்வாக அலுவலராகப் ... மேலும் பார்க்க

நந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் அளிப்பு

நந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் பசுமைத் திருவிழா 2024 என்ற தலைப்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. நந்தா கல்வி நிறுவனங்கள், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், ரவுண்ட் டேபிள் இந்தியா, பி... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு மையம் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் வேதியியல் தொழில்நுட்பப் படிப்புக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டது. சென்னை சிம் இன்போசிஸ்டம்ஸ் நிறுவன உதவியுடன், கெமிக்கல் சிமுலேசன் படிப்புக்கான மையத்தை கொங்கு ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: 4 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யபப்பட்ட 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். ஈரோடு மாநகராட்சி மண்டல சுகாதார அதிகாரிகள் ஜாகீா் உசேன், தங்கராஜ் ஆகியோா் தலை... மேலும் பார்க்க